இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கை சட்டகமானது எதிர்காலத்திற்கான நோக்கு மஹிந்த சிந்தனை அடிப்படையில் அமைந்துள்ளதோடு அபிவிருத்தி சேவைகளின் ஏற்பாடு வழங்குகையில் அதன் முக்கிய செயலாற்றுகையை குறித்துக் காட்டுகிறது. புதிய தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்க நிறுவனங்களின் தற்போதுள்ள தாபித அமைப்பின் நோக்கு மற்றும் பணிகளை உறுதிப்படுத்தி புதிய பார்வையொன்று செலுத்தப்பட வேண்டிய தேவையொன்று உள்ளது. மக்களின் தேவைகளை சிறந்த வகையில் வழங்குவதற்கான புதிய பார்வை ஒன்றுக்கான தேவையும் உள்ளது. இங்கு தொழிற்பாட்டு வினைத்திறனும் நிகழ்ச்சித்திட்ட பயனுறித்தன்மையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தாக காணப்படுகின்றது. 2004/2005 ஆம் காலங்களிலிருந்து தொழிற்பட்ட நிர்வாக சீர்திருத்த குழுவானது, முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களினூடாக தொழிற்பாட்டு மீளாய்வொன்றினை மேற்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த மறுசீரமைப்பு கூடங்கள் தமது தொழிற்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளதோடு தற்போது மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளன.
அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகளின் மாதிரி போன்றவை உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட அரசாங்க அமைப்புக்களில் மீளாய்வொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது 18 மாதங்கள் என்ற 3 சுற்றுக் காலப்பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 20 நிறுவனங்கள் மீளாய்வு செய்யப்படும்.
முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்கள் முதலாவது கட்ட மீளாய்வை மேற்கொள்ளும் என்பதோடு, சுயாதீன மீளாய்வுகள் அந்த நோக்கத்திற்காக தெரிவு செய்யப்பட்ட வெளியக மூலவள ஆட்களின் உதவி, வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும். இரண்டாவது அல்லது சுயாதீன மீளாய்வு பிரச்சினைகள் மற்றும் விடயங்களின் ஆழமான பகுப்பாய்வொன்றாக இருக்கும் என்பதோடு அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அடையாளங் காணுவதுமாகவும் இருக்கும். 2011.02.23 ஆம் திகதியன்று அரசாங்க அமைப்புக்களின் தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வின் நடத்தை பற்றிய ஓர் அமைச்சரவை தீர்மானப்படி கருத்திட்ட பிரேரணை ஒன்று தயாரிக்கப்பட்டு பொதுத் திறைசேரியின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரேரணையானது ஏனையவற்றுக்கிடையில் முறைமையியல், கால அளவு, வழங்கப்படவேண்டிய சேவைகள், வெளியக மூலவள ஆட்களுக்கான கொடுப்பனவு முறைமைகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது. இந்த மீளாய்வு செயன்முறை 2011 ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன. கருத்திட்டத்துக்கு தேவையான நிதிகள் 2011 மற்றும் 2012 க்கான அமைச்சு செலவுத் தலைப்புகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலாவது சுற்று முன்னோடி அமைப்பொன்றாக மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 2012 மார்ச், ஏப்ரல் மாதம் அளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
ஒரு மீளாய்வு நெறியாள்கை குழு தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வில் பிரேரணையில் முன்மொழியப்பட்டிருக்கின்றது. இக் குழுவானது முழு செயன்முறையையும் கண்காணிப்பதற்கு பொறுப்பாக இருக்கும் என்பதோடு, கருத்திட்ட செயற்பாடுகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட மீளாய்வை நடாத்துவதற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கும்.