தேசிய நிருவாக மறுசீரமைப்பு மன்றம் (தே.நி.ம.ம)

தேசிய நிருவாக மறுசீரமைப்பு மன்றமனாது அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் வருகின்றது.

தேசிய நிருவாக மறுசீரமைப்பு மன்றம் அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால் அதிமேதகு சனாதிபதிக்கு உறுத்தளிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் நிருவாக மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை வடிவமைத்து, பணிப்புருத்தி அமுலாக்குவதனைநோக்காகக் கொண்டுசனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் உருவாக்கப்பட்ட விசேட அரசாங்க முகவராண்மையாகும்.

தேசிய நிருவாக மறுசீரமைப்பு குழுவின் ஆணை பின்வரும் நிருவாக சீர்திருத்த கொள்கைகளை உள்ளடக்கியதாக உள்ளது:
(i.) முழுமையான நிருவாக மற்றும் முகாமைத்துவ அரசாங்க பொறிமுறையானது நோக்கு சார் செலவு சிக்கனமுடையது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தேவைப்படக்கூடயதான எந்தவொரு சீர்திருத்தத்தையும் மேற்கொள்ளும் நோக்குடன் தொடரான அரச துறையின் நிருவாக மற்றும் முகாமைத்துவ கட்டமைப்புக்களை மீளாய்வு செய்தல்,
(ii.) பொதுத் துறையின் அனைத்துத் துறைகளையும் சார்ந்த அதிகாரிகளின் ஊக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் தொடரான அடிப்படையில் அரசாங்கத்தில் மனித வள முகாமைத்துவம் மற்றும் மனித வள அபிவிருத்தியை மீளாய்வு செய்தல் ,
(iii.) தேவையான பொருத்தமான அமைப்பில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடியவாறு வினைத்திறன்மிக்க, பயனுறுதியுள்ள, பொதுமக்கள் நட்புள்ள தேவையொன்றை அரசாங்க பணியொன்றை மேற்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கான தேவையான மாற்றங்கள் தொடரான அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அரசாங்க நிறுவனங்களில் பணி செயல்முறைகளை மீளாய்வு செய்தல்,
(iv.) நிருவாக மற்றும் முகாமைத்துவ மேம்பாடு மற்றும் நவீனமயப்படுத்துகை நோக்கத்தோடு பொருத்தமாக இருக்கத்தக்கதான அரசாங்க நிறுவனங்களின் எந்தவொரு துறையையும் பரிசோதனை செய்தல்,
(v.) மேலே (i) முதல் (iv) வரையான விடயங்களின் அடிப்படையில் தேவைப்படக்கூடியதான அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளுக்குமான அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் பணிப்புறுத்தி வடிவமைத்து அமுலாக்குதல்,
(vi.) அத்தகைய அமுலாக்கத்தின் முன்னேற்றத்தை கண்காணித்து அரசாங்கத்திற்கு காலத்திற்கு காலம்அறிக்கை செய்தல்.
தேசிய நிருவாக சீர்திருத்த மன்றத்தின் சீர்திருத்த முன்னெடுப்புகள்:
(i.) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையின் அரசாங்க நிகழ்ச்சித் திட்ட மறுசீரமைப்புக்கான அதிஉச்ச கொள்கை வகுத்தல் குழுவாக செயற்பட்டு மீள் அரசாங்க கருத்திட்டங்களில் ஏற்படுகின்ற பல்வேறு அமுலாக்குவதில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.
(ii.) அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், ஏனைய நிறுவனங்களில் முகாமைத்துவ மறுசீரமைப்புக் கூட வலைபின்னல் ஒன்றை தாபித்தல். முகாமைத்துவ மறுசீரமைப்புக் குழுவின் பிரதான பணிகளாவன;
(a). நிருவாக சீர்திருத்தங்களுக்கான பிரேரணைகளை சமர்ப்பித்து தேசிய நிருவாக சீர்திருத்த மன்றத்திற்கு உதவுதல்.
(b). தேசிய நிருவாக சீர்திருத்த மன்றத்திற்குவழங்கப்படுகின்ற நிருவாக சீர்திருத்தங்களுக்கான அரசாங்கத்தின் பிரேரணைகளை அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
(c). அமைச்சின் கீழான திணைக்களங்கள், நிறுவனங்களில் நிருவாக சீர்திருத்தங்களுக்கான மேற்படி பிரேரணைகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
(d). முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களினுல் தோன்றுகின்ற மறுசீரமைப்புக்களுக்கான பிரேரணைகளை அமுல்படுத்தி அது பற்றி தேசிய நிருவாக சீர்திருத்த மன்றத்திற்குவிழிப்புணர்வூட்டுதல்.
(e). அரசாங்க சேவையாளர்கள் நிருவாக சீர்திருத்தங்களுக்கு ஒத்துச் செல்கின்றனர் என்ற அரசாங்கத் துறை நிறுவனங்களில் அத்தகைய கலாசாரத்தை உருவாக்குதல்.
(iii.) அமைச்சு செயலாளர்களின் ஒழுங்குறுத்துகை பணிப்பழுவை குறைப்பதற்கான உபாயமுறைகளை விருத்தி செய்தல் (அறிக்கை தயாராக உள்ளது)
(iv.) அரசாங்க முகவராண்மைகளுக்கான பணி கைநூல்களை தயாரித்தல். (பிரதேச செயலாளர்களுக்கான பணி நூல் தயாரிக்கப்பட்டுள்ளது)
(v.) ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரங்களை செய்வதில் அரச துறை தலையீடுகளை இலகுபடுத்துவதற்காக ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தல். அமைச்சரின் செயலாளரின் தலைமையின் கீழ் ஒரு முத்தரப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. குழுவானது அரச துறை தனியார் துறை சார்ந்த இரண்டு தரப்பினரிலும் அனைத்து தரப்புகள் தொடர்பிலும் பணிகளை ஆரம்பித்துள்ளது.
(vi.) இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவகத்தின் அனுசரணையுடன் சிரேஷ்ட அரச சேவையாளர்களின் திறன் கட்டியெழுப்புகை செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
(vii.) இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவகத்தின் அனுசரணையுடன் மனிதவலுஅபிவிருத்தி உபாய முறை ஒன்றை விருத்தி செய்தல்.

 

தொடர்புடைய ஆவணங்கள் -
doc கடிதம்-தேசிய நிருவாக சீர்திருத்த ஆணைக்குழு தாபிதம் 2009/06/12 ஆம் திகதியிட்டது
doc வர்த்தமானி அறிவித்தல் இல: 1499/20 2007/05/30 ஆம் திகதியிட்டது
தேசிய நிருவாக சீர்திருத்த மன்றத்தின் தலைவரான பணிப்பாளர் நாயகமே அதன் நிறைவேற்று பிரதானியாவார். இவரே மன்றத்தின் செயலாளராகவும் இருக்கிறார்.

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom