அதிமேதகு சனாதிபதி அவர்களினால் அலரிமாளிகையில் வைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு 2012 ஏப்ரல் 02 ஆம் திகதியன்று ஆற்றப்பட்ட உரையின் அடிப்படையில் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு 2012 ஏப்ரல் 9 ஆம் திகதியிட்ட PCMD/AD/2/1/1/26 இல. கடிதத்தினால் சனாதிபதியின் செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள், கட்டளைகளுக்கு இயைவாகவும் அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கும் மாகாண பிரதம செயலாளர்களு பிரதியுடன் 2012 ஏப்ரல் 9 ஆம் திகதியிட்ட PCMD/3/9 இலக்கசனாதிபதியின் செயலாளரின் கடிதத்தினாலும் அரச சேவையை மீள் ஒழுங்குபடுத்துகையின் முதல் கட்டமாக 2012 ஜூன் இலிருந்து ஆரம்பித்து ஆறு மாத காலப்பிரிவொன்றுக்கு ஒவ்வொரு அமைச்சிலும் மீள் ஒழுங்குறுத்துகை பிரிவுகளை தாபித்து அமுல்படுத்தும் படி அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.
அதன் வண்ணம் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் மீள் ஒழுங்குபடுத்துகை பிரிவுகளை தாபிக்கும்படி நான் பிரேரணை செய்வதோடு (அமைச்சுக்கள், திணைக்களங்கள், நியதிச் சட்ட சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலாளர் பிரிவுகள் போன்ற 25 உத்தியோகத்தர்களுக்கும் மேற்பட்ட / ஏனைய அரசாங்க நிறுவனங்களின் பிராந்திய அலுவலகங்கள்) பிரேரிப்பதோடு அவற்றை ஆறு மாத முடிவின் இறுதியில் முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களாக மாற்றும் படியும் வேண்டுகிறேன்.
அமைச்சின் செயலாளர் மீள் ஒழுங்குறுத்துகை பிரிவின் தலைவராகவும், மேலதிகச் செயலாளர் மீள் ஒழுங்குறுத்துகை பிரிவின் ஏற்பாட்டாளராகவும் செயற்படுவார். ஏனைய நிறுவனங்களின் மீள் ஒழுங்குறுத்துகை பிரிவின் தலைவராக நிறுவனத்தின் தலைவர் இருப்பதோடு நிறுவனத்தின் இரண்டாம் நிலை அலுவலர் ஒருவர் அதன் ஏற்பாட்டாளராகவும் இருப்பார். மீள் ஒழுங்குறுத்துகை அங்கத்தவர்களின் எண்ணிக்கை 7 இற்கும் 9 இற்கும் இடையில் வரையறுக்கப்படும் என்பதோடு முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடத்தின் ஏற்பாட்டாளர், பிரதான புத்தாக்க அலுவலர், உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அலுவலர் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக இருப்பர்.
A six-month Action Plan for re-engineering the public services provided by the institutions should be prepared before 15th June 2012 and arrangements made to reach a copy of the same to the Presidential Secretariat and the Ministry of Public Management Reforms.
பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற தேவைகளை மீள் ஒழுங்கமைப்பதற்கான ஆறு மாத செயல் திட்டம் நிறுவனங்களினால் 2012 ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர் தயாரிக்கப்பட வேண்டும் என்பதோடு அதன் பிரதியொன்று சனாதிபதி செயலகத்திற்கும், அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சுக்கும் கிடைக்கப் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் ஆவணங்களும் தேசிய நிருவாக மறுசீரமைப்பு மன்றத்தின் முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் தாபிதம் மற்றும் அமுலாக்கம் தொடர்பாக அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் தேசிய நிருவாக மறுசீரமைப்பு மன்றத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல் ஆவணங்களை இந்த அமைச்சின் இணையத்தளமான
www.reformsmin.gov.lk என்ற முகவரியில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களை அணுகுவதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அல்லது நேரடியாக இணையத்தள பக்கமான www.reformsmin.gov.lk/development-programmes/mrcs.
ஏனைய தொடர்புடைய ஆவணங்கள்