2011 பெப்ரவரி 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 2006 வரவு செலவுத்திட்டத்தின் அடிப்படையில் பொதுச் சேவைகள், சம்பளங்களை மீள் கட்டமைத்தல் தொடர்பான 2006 ஏப்ரல் 26 ஆம் திகதியிட்ட 06/2006 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி, சேவைப் பிரமாணங்கள் மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கான திருத்தங்களின் தாமதத்தின் விளைவாக அரச சேவையாளர்களுக்கிடையே ஒரு அதிருப்தி தன்மை உருவாக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயம் விரிவான கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த திருத்தங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய சம்பளங்கள் மற்றும் தேசிய ஆளணி ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்படட் அதிகாரங்களினால் விடுக்கப்பட்ட பல்வேறு கடிதங்கள் NSCC/1/GP/5 ஆம் இலக்க கடிதம், பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் EST-2/POLCY/03/0763 இடப்பட்ட கடிதம், இறுதியாக 2011 ஏப்ரல் 05 ஆம் திகதி சனாதிபதியின் செயலாளருக்கான E&O/AC/3/3/1இலக்கத்தைக் கொண்ட கடிதம். இந்த குறிப்பிட்ட அரசாங்க நிருவாக சுற்றறிக்கையில், அதிலிருந்த திருத்தங்களும் சில வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்ட போதிலும் தொடர்புடைய அதிகாரங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டதோடு அரசாங்க சேவையாளரின் சம்பள மாற்றம் தவிர்ந்த தற்போதுள்ள சேவைப் பிரமாணங்கள் ஆட்சேர்ப்பு திட்டங்கள் தொடர்பான சிறு மாற்றங்களே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அரச சேவையாளர்களினால் எதிர்கொள்கின்ற சிரமங்களை ஒழிக்கும் நோக்குடனும் 2006 வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டவாறு 2006.01.01 இலிருந்து நடைமுறைக்கு வருகின்றவாறு புதிய சம்பள கட்டமைப்பை அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை துரிதப்படுத்துவதற்கும் அமைச்சரவை பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.
மேலே 1 இல் குறிப்பிட்டதற்கு அமைவாக கண்காணிப்பை இலகுபடுத்துவதற்காக அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சுக்கு அனைத்து அமைச்சுக்களும் அவற்றின் கீழுள்ள நிறுவனங்களிலுள்ள ஊழியர்களின் தொடர்புடைய வகுதிகள் சம்பந்தமான வரைவின் பிரதியொன்றை சமர்ப்பித்தல் வேண்டும். தொடர்புடைய அரசாங்க முகவராண்மைக்கு அனுப்புகின்ற அதேவேளை அமைச்சுக்களும் நிறுவனங்களும் அவற்றின் நோக்கெல்லையின் கீழ் இந்த விடயத்தை கையாளுவதில் அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சுக்கு ஒத்துழைக்கவும் வேண்டும் எனவும் மேலும் வேண்டப்பட்டது. சேவைப் பிரமாணம் மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கான திருத்தங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, தேசிய சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் என்பன ஒரு இணைந்த முன்னணி செயற்பாட்டில் இருக்கின்றதோடு அனைத்து அமைச்சுக்களும் அத்தகைய அமைச்சுக்களின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற திணைக்களங்கள், நியதிச் சட்ட சபைகளின் பிரதான உத்தியோகத்தர்களின் உதவியுடன் தொடர்புடைய சேவைப் பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும்.
அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு அமைச்சரவைக்கு காலாண்டு முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு பணி குறித்தொதுக்கப்பட்டமையினால் தொடர்புடைய நிறுவனங்கள், அதிகார சபைகள் என்பவற்றினால் எடுக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, சேவைப் பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டங்கள் திருத்தச் செயன்முறையை துரிதப்படுத்துவதற்கு அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சுக்கு ஒத்துழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2011/05/13 திகதியன்று இடம்பெற்ற செயலமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
(இது தொடர்பில் உங்கள் கருத்துரைகளை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புக)
சேவைப் பிரமாணங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு திட்டங்களின் தயாரிப்பு தொடர்பான முன்னேற்றம்