முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடத்தின் ஏற்பாட்டாளர்களின் இரண்டாவது மன்றம்

30 நவம்பர் 2010

அரசாங்க சேவையில் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் தாபிக்கப்பட்ட முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடத்தின் ஏற்பாட்டாளர்களின் இரண்டாவது அமர்வு அண்மையில் அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சில் இடம்பெற்றது. (08.03.2011)

 

இந்த அமர்வானது சனாதிபதி செயலகத்தினதும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களினதும் மேலதிகச் செயலாளர்கள், சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம் பெற்றது.

 

இந்த அமர்வில் கூடத்தின் தாபிதம், மனிதவள அபிவிருத்தி முறைமையியல், முறைமையியல் மற்றும் நடைமுறை அபிவிருத்தி, வாடிக்கையாளர் திருப்தியை உறுதிப்படுத்தல், உற்பத்தி திறனையும் விளைவுப் பெருக்கத்தையும் அதிகரித்தல் போன்ற மாற்றப்படவுள்ள பல்வேறு துறைகள் பற்றியும் ஆழமான கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.

 

தொடர்பாடல் தொழில்நுட்பம், நிறுவன ரீதியான மற்றும் ஆள்சார் செயலாற்றுகை மதிப்பீடு, பிரஜைகள் பிரகடனத்தை அமுலாக்கம், பொதுமக்களின் குறைகளை தீர்த்தல், பதவியினருடன் தொடர்புடையஇடைத்தொடர்பு ஆற்றலை கட்டியெழுப்புதல்.

 

அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் அரசாங்க சேவையை மக்கள் நட்புடையதாகவும் அரச வினைத்திறன் கொண்ட அரச சேவையாக மாற்றும் நோக்கிற்கு இணங்க அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் நோக்கத்திற்கு இயைவாக இந்த புதிய நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

forum_1 forum_2 forum_3

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom