அரசாங்க துறையை மக்கள் நட்புக் கொண்ட வினைத்திறன்மிக்க சேவையொன்றாக மாற்றியமைக்க இரண்டு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்–நவீன் திசாநாயக்க

30 நவம்பர் 2010

info 1291055400

 

வெளிப்படைத்தன்மையுடன் ,  வினைத்திறன் கொண்ட சேவையொன்றாக பொதுத் துறையை மாற்றியமைக்கும் நோக்குடன் பொதுத்துறை மறுசீரமைப்பு இரண்டு கட்டங்களின் கீழ் அமுல்படுத்தப்பட வேண்டுமென அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

 

“அரசாங்க துறையில் தற்போதுள்ள குறைபாடுகளை நீக்கி, அரசாங்க துறை நிறுவனங்களினூடாக அதில் வினைத்திறன்மிக்க, பயனுறுதியுள்ள சேவையொன்றினை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான பிரேரணைகளை அமைச்சரவை ஏற்கனவே அங்கீகரித்துள்ளது.” இக்கருத்துக்கள் அமைச்சரினால் அண்மையில் இடம்பெற்ற (22.03.2011) கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டதோடு, இதில் பல்வேறு அமைச்சு செயலாளர்கள்,  அந்த அமைச்சரவை தீர்மானங்களை அமுல்படுத்தும் நோக்கில் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

அரச துறை மறுசீரமைப்பு செயற்பாட்டில் அதனுடன் தொடர்புடைய குறைபாடுகள் முதல் சந்தர்ப்பத்திலேயே அடையாளங் காணப்படுதல் வேண்டும். நிறுவனத்தினுள்ளே அதற்கான பரிகார நடவடிக்கைகள் காணப்பட முடியுமாயின் அது சரியான திசையில் நகர்த்தப்பட முடியும் என அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

 
மறுசீரமைப்பு செயன்முறையானது நிபுணத்துவ அறிவுடைய உசாவுநர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
 

06/2006 பொது நிர்வாக சுற்ற்றிக்கையூடாக உத்தேசிக்கப்பட்ட அரச துறையில் சம்பள கட்டமைப்ப விடயமும் இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது. சுற்றறிக்கையின் பிரகாரம் சேவை பிரமாணங்கள், கட்டமைப்பு, ஆட்சேர்ப்பு திட்டம் என்பவற்றை மீளாய்வு செய்வதற்காக உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது. எவ்வாறாயினும் பிரேரணைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. ஆதலால் அந்த பிரேரணைகளின் அமுலாக்கத்திற்கான தேவையை அமைச்சர் நவீன் திசாநாயக்க வலியுறுத்தினார்.

 

கலந்துரையாடலில், அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சரின் செயலாளர் திரு. ஜி.கே.டி. அமரவர்தன, பொது நிர்வாக அமைச்சரின் செயலாளர் திரு. பி.பீ. அபேக்கோன், நிதி திட்டமிடல் அமைச்சினை பிரதிநிதித்துவப்படுத்தி பல திணைக்களங்களின் தலைவர்கள், தேசிய சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழு, வரவு செலவுத் திட்ட திணைக்களம் ஆகியனவும் கலந்து கொண்டன.

01 02 03
 

 
 

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom