2011.03.24 ஆம் திகதியன்று இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவகத்தில்மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில் அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களால் ஆற்றப்பட்ட உரை.

 
 
பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்க சேவைகள் சீர்செய்யப்பட வேண்டும் என கௌரவ நவீன் திசாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.
 
info 1291055400
 

மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், நாட்டின் முற்போக்கு நடத்தைக்கு அதிகம் பங்களிப்பு செய்யும் நோக்குடன் இந்த அமைச்சு சில மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க இந்த அமைச்சின் முதலாவது அமைச்சராக இருந்துள்ளார்.

.

தற்போது நாம் ஐக்கியமான இலங்கையாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையிருக்கின்றது. பல்வேறுபட்ட தனி நபர்களுக்கும் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் காணப்படலாம். உதாரணமாக வடக்கிலுள்ளவர்கள் பல்வேறு பிரச்சினைகளை கொண்டிருக்கின்றனர். இவற்றில் அனேகமானவை அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்டவையாகும். ஆதலால் வடகிழக்கில் உள்ள மக்களின் மனோபாவத்தையும், சிந்தனையும் பரிசோதிப்பது முக்கியமானதாகும்.

.

அரசாங்க நிர்வாகத்தை கையாளுவதற்கு நீங்களே பிரதான வழிகாட்டிகளாக இருக்கின்றீர்கள். முகாமைத்துவ மறுசீரமைப்பு செயற்பாட்டில் மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டதை யதார்த்தமாக்குவதற்கு கூடிய அரசாங்க சேவையொன்றை நாம்  தாபித்தல் வேண்டும். அதன் வண்ணம் இந்த அமைச்சின் தலையீட்டுடன் அரசாங்க சேவையில் தேவையான கட்டமைப்பு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் அவை அனைத்தும் துறையிலுள்ள அனைத்து பங்குதாரர்களினதும் இசைவுடனேயே மேற்கொள்ளப்படும். தற்போது இந்த கட்டமைப்பு மாற்றங்கள் எவ்விதத்திலும் சுமையாக இருக்காததோடு அவற்றை அமுல்படுத்துவதானது விரிவான கலந்துரையாடல்கள், ஆய்வுகளின் பின்னரும் கூட சிரமமானதாகவே இருக்கும்.

.

நான் உங்களை விட அரச சேவையில் குறைந்த அனுபவத்தைக் கொண்ட அரசியல்வாதியாகவே இருக்கின்றேன். அறிந்து கொள்ளப்பட்ட நோக்கங்களை அடைவதற்கு நாம் ஒன்றாக செயற்பட வேண்டியுள்ளது. நாம் வாழுகின்ற சமுகம் எல்லா விடயங்களையும் எதிர்மறையாகவே நோக்க கற்றுக் கொண்டிருக்கின்றது. அரசாங்க சேவையாளர்களும் கூட இதே முகத்தையே கொண்டிருக்கின்றனர். எந்தவொரு நபரும் நல்ல வேலை பற்றியோ அதை பாராட்டுவது பற்றியோ கதைப்பதில்லை.

.
அரசாங்க அலுவலர்கள் என்ற வகையில் அலுவலக அறைகளுக்கு மட்டுப்படுத்தி மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கு நாம் இறுதித் தீர்வுகளை கண்டுவிட முடியாது. .
.

நூற்றுக்கணக்கான மக்கள் அவர்களது குறைகளை தீர்ப்பதற்காக எம்மை நாளாந்தம் நாடி வருகின்றனர். ஆதலால் நாம் அவர்களுடன் நடந்து கொள்ளுகின்றபோது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அவர்கள் எதிர்மறையாக சிந்திப்பதை விட சாதகமாக சிந்தித்து செயற்படுவர். இதுவே கடந்த காலத்தில் நடைமுறையாக இருந்தது. சில சந்தர்ப்பங்களில் அரசாங்க சேவையாளர்கள், நாம் அரசியல்வாதிகள் என்ற வகையில் எது செய்ய வேண்டுமோ அது செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். மறுபுறத்தில் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு கோட்பாடுகளுக்கு உட்பட்டு பொதுமக்களுக்கு சேவை செய்வோம்.

.

மக்களுக்கு வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்குகின்ற நோக்கத்துடன் அரசாங்க சேவையாளர்களை பயிற்சியளிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாம் இங்கு அரசாங்க நிர்வாக அமைச்சு செய்கிள்ற பணியை செய்வதற்கு வரவில்லை. அரசாங்க நிர்வாக அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களின் போதியதன்மை இன்மை காரணமாக, முகாமைத்துவ உதவியாளர்கள்,எழுது வினைஞர்கள் அதற்கும் கீழே உள்ள சிறு தர ஊழியர்கள் போன்ற குறைந்த தரத்திலுள்ள  ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து இவ்வருடத்தில் விரிவான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் பலவற்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

.

இந்த பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கு நாம் நன்கொடை முகவராண்மைகளை எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பாக அவர்கள் சாதகமாக பதிலளித்துள்ளனர். இதை வெற்றிகரமாக ஆக்குவதற்கு உங்களது பங்களிப்பு, ஆதரவு அத்தியவசியமானதாகும்.

.

இந்த ஏற்பாட்டில் நாம் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் நெருக்கமாக பணி புரிய வேண்டியுள்ளது. எமது நோக்கம் பொதுமக்களுக்கு அவர்களது திருப்திக்கு ஏற்ற வகையில் சேவையளிப்பதாகும். அந்த வகையில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு தரமான, வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்குவது உறுதிப்படுத்தும் வகையில் கைகோர்த்து செயற்பட வேண்டும். ஆதலால் மாறிவருகின்ற சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருந்து புத்தாக்க சிந்தனைகளையும், முறைமைகளையும் கொண்டு அவற்றை மேற்கொள்ளுதல் வேண்டும். ஓரிரு தினங்களுக்குள் இந்த இலக்கை நாம் அடைய முடியாது என்பது உண்மை. ஆனால் கூட்டு முயற்சியுடன் நாம் இதை அணுகினால் அது ஒரு சிரமமான விடயமல்ல.

.

ஒவ்வொருவருக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்துகின்ற, மதிப்புமிக்க அரச சேவையொன்றின் வரலாற்றைக் கொண்டிருக்கின்றோம். நாட்டின் அபிவிருத்தியை பொறுத்தவரையில் அரசாங்க சேவையாளர்களிடம் மிகப் பாரிய பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமக்கு முன்னே இந்த அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் மஹிந்த சிந்தனை எதிர்கால செயற்கட்டமைப்பை அடைவதில் பாரிய சவால் ஒன்று உள்ளது.

.

இன்றைய கோட்பாடுகள் 30 வருடங்களுக்கு முன்னிருந்தவையை விட வித்தியாசமானவையாகும். அக்காலத்தில் நெல் அதிகாரிகளினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் மிகவும் துள்ளியமாக அமுல்படுத்தப்பட வேண்டியிருந்தன. இன்று அது ஒரு குழுப் பணியாக மாற்றமடைந்திருக்கின்றன. இது தொடர்பில்தனியார் துறையிடமிருந்து சிறந்த பாடங்களை கற்றுக் கொள்ளல் வேண்டும்.

.

மேலதிகாரிகள் தமக்கு கீழுள்ள உத்தியோகத்தர்களின் பணிகளுடன் தலையீடு செய்தல் கூடாது. அவர்களால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு உச்ச திருப்தியை அளிக்கத்தக்கவகையில் கடமைகளை மேற்கொள்ள முடியும். இதேவேளை தமக்கு ஒப்படைக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு தவறிய கனிஷ்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் குற்றங்களை காணுவதை விட மேலதிகாரிகளால் கனிஷ்ட அதிகாரிகளை ஊக்குவிக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

மொத்தத்தில் நாம் எமது நடத்தையும் சிந்தனையும் அதிகளவு மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது. கற்றல் முடிவற்றது, தொடர்ச்சியான ஒரு செயன்முறையாகும். அரச சேவையிலுள்ள ஒவ்வொரு நபரும் உயர்ந்த அறிவு, புத்தாக்க சிந்தனை, நவீன மனோபாவங்கள் போன்றவற்றை கொண்டு நிரம்பியிருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இது இரு தரப்புக்களுக்கும் பூரண திருப்தியுடன் பொதுமக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவேயாகும்.

 
 

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom