இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவகத்தில் 2011.05.12 ஆம் திகதியன்று அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களால் ஆற்றப்பட்ட உரை

01 ஜூன் 2011

நாட்டுக்கான உயர் பொருளாதார இலக்குகளை அடைவதனை இறுதி இலக்காகக் கொண்டு தற்போதுள்ள குறைபாடுகளை நீக்கி, அரச சேவையை வினைத்திறன்மிக்க, மக்கள் நட்புடைய சேவையொன்றாக மாற்றும் நோக்குடன் முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்கள் தாபிக்கப்பட்டன என அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.

இக் கருத்துக்கள் மறுசீரமைப்புக் கூடச் செயலாளர்கள், ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட செயலமர்வில் அமைச்சரினால் வெளியிடப்பட்டது.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அரசாங்க சேவையானது பெரும்பான்மையான அரச சேவையாளர்களுக்கு நன்றி கூறத்தக்கவகையில் திருப்திகரமாக தொழிற்படுகின்றது. இவர்கள் நாளாந்தம் மாறிவருகின்ற சர்வதேச நிலைமைகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கு சாதகமான சிந்தனைகளுடன் செயற்படுகின்றனர். எனினும் மிகக் குறைந்த பிற்போக்கு சிந்தனையாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் எமது எதிர்கால முன்னேற்றத்துக்கு தடையாக இருந்து வெற்றியை தாமதிக்க செய்கின்றனர்.

அரச சேவையில் எல்லாவித மாற்றங்களையும் ஏற்படுத்துவதற்கு எம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டிய தேவையுள்ளது என அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

நடத்தை மாற்றங்கள் ஊடாக வினைத்திறன்மிக்க அரசாங்க சேவையை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்க மற்றும் தனியார் துறைகளை மேம்படுத்துவதற்கு அதிமேதகு சனாதிபதி நாடியுள்ளார். அரச நிறுவனங்கள் தமது சுயமான கட்டமைப்பைக்  கொண்டிருக்கின்றது. அவற்றை பயன்படுத்துவதானது சாதகமான சூழ்நிலையில் பாரிய மாற்றங்களுக்கு இட்டுச்செல்லக் கூடும் நான் நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

24 மணி நேர அரசாங்க சேவை கோட்பாட்டை இறுதியாக முன்னெடுத்துச் செல்லத்தக்கதாக தேவையான தொழில்நுட்பங்களுக்கான பாரிய மாற்றங்களை கொண்டுவரக்கூடிய சிறிய முறைமைகளை எடுப்பது இது தொடர்பில் செய்யப்பட வேண்டிய முன்னெடுப்பாகும் என அமைச்சர் சுட்டிக் காட்டினார். இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் போன்று அரச சேவையை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திரு. ஜி.கே.டீ. அமரவர்தன, குடிவரவு, குடியகழ்வு கட்டுப்பாட்டு நாயகம் திரு. டப்ளியு.ஏ. சூலாநந்த பெரேரா ஆகியோரும் மற்றும் பல்வேறு ஏனைய உயர் தரத்திலான உத்தியோகத்தர்களும், அரச சேவையாளர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

 

01 02 03

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom