ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் 2011.05.13 ஆம் திகதியன்று அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களால் ஆற்றப்பட்ட உரை

01 ஜூன் 2011

வினைத்திறன்மிக்க சேவையை வழங்கத்தக்கதான அரசு, பொதுமக்களின் உள்ளூர் தேவைகளுக்கு பொருத்தமானதாக அரசாங்க சேவை அத்தியவசியமாக மீள்கட்டமைப்பு செய்யப்பட வேண்டும் என அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு 07, விஜேராம மாவத்தையிலுள்ள ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தில்  2011.05.13 ஆம் திகதியன்று இடம்பெற்ற சேவை பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டம்திருத்தியமைத்தலின் முன்னேற்ற அறிக்கைக்கு அமைச்சுக்களினால் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்தரங்கில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், அரசாங்க சேவை தொடர்பில் இந்நாட்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்ற முரண்பட்ட கருத்துக்களை இங்கு நினைவு கூர்ந்தார். ஆதலால் அரசாங்க சேவை இவ்வளவு தூரம் வினைத்திறன்மிக்கதாக உள்ளது எனக் கேட்டுக் கொள்வதற்கு இது ஒரு தக்க சந்தர்ப்பமாகும்.

எமது பொதுமக்களுக்கு சிறந்த வகையில் சேவையாற்றுவதற்காக எதிர்காலத்திற்கான மஹிந்த சிந்தனை நோக்குக்கு அமைவாக அரசாங்க சேவையை வினைததிறன்மிக்கதாக இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது இங்கு ஒரு புதிய விடயமல்ல. அப்போது மட்டுமே எதிர்காலத்திற்கான மஹிந்த சிந்தனை நோக்கின் கீழான பொருளாதார இலக்குகளை நாம் அடையமுடியுமாக இருக்கும். உங்கள் உதவி முன்னே வருமேயானால் அதை நாம் மிக இலகுவாக அடைய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

எமது அமைச்சு புதிதாக தாபிக்கப்பட்ட அமைச்சாகும். இது அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு தொடர்பான விடயங்களை கையாளுகின்றது. அதிமேதகு சனாதிபதி எமது கூட்டு முயற்சிகளின் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

06/2006 ஆம் இலக்க அரச முகாமைத்துவ சுற்றறிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டிருக்கின்றது. முதலாவதாக நாம் தற்போதுள்ள குறைபாடுகள் மற்றும் சிரமங்களை அடையாளங்காணுகின்ற செயற்பாட்டில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோம்.

சாதகமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் இது தொடர்பில் செய்வது தொழிற்சங்கங்களின் இயற்கையான சுபாவமாகும். ஆனால் நாம் இதனை இலகுவாக செய்து கொள்ள முடியாது. ஏனெனில் நாம் யதார்த்தத்துக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்தாக வேண்டும். ஏனெனில் பல்வேறுபட்ட ஏனைய நாடுகள் அவற்றின் தேவைகளுக்கமைவாக அரசாங்க சேவையை மீள்கட்டமைப்பு செய்துள்ளன. நாம் குறுக்கு வழிகளையோ அல்லது சாட்டுப்போக்குகளையோ காணவில்லை. ஆனால் நாம்பொருத்தமானதையே பின்பற்றுகின்றோம் என அமைச்சர் தெரிவித்தார்.

01 02 03

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom