தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினூடாக அரசாங்க சேவைகளை மேம்படுத்துதல்

26 யூலை 2011

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமூடாக அரசாங்க சேவைகளை மேம்படுத்துதல்:
எதிர்கால அரசாங்க மன்றம் இலங்கை - 2011 இல் இடம்பெற்ற கௌரவ அமைச்சரின் உரை (20.07.2011)

நவீன சமூகத்தின் பரந்த எதிர்பார்ப்புகளும், பிரதான குணப் பண்புகளும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தினை பயன்படுத்துதல், நேரத்திற்கு அதிக பெறுமானத்தை வழங்குதல், விரைவான கொடுக்கல் வாங்கலும் தகவல் காணப்படும் நிலைமையும் என்றவாறு விபரிக்கப்படலாம். மறுபுறத்தில் தனியார் துறையானது மிகவும் பயனர் நட்புடைய, நவீன சமுதாயத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றத்தக்கதாக மாறியுள்ளது. அரசாங்க துறையினால் வழங்கப்படுகின்ற அரசாங்க பொருட்கள். நவீன சமுதாயத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யத்தக்கதாகவிருத்தி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆதலால் பொது மக்கள் வேண்டுதலுக்கான விரைவான பதில்களும் அவர்களது குறைபாடுகளுக்கான நிவாரணமும் பொதுத் துறையில் முக்கிய அம்சமொன்றாக இருப்பதோடு, அதன் பிரகாரம் அரசாங்க சேவை விருத்தி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. இந்தப் பின்னணியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் இலங்கை அரச சேவையில் முக்கிய பங்கொன்றை ஆற்ற முடியும். அரசாங்க சேவைகளை பெறுவதற்கான இலகு அனுகுமுறைக்கான அரசாங்க சேவைகளின் நவீனமயமாக்கல், அரசாங்க சேவைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பழக்கப்படுத்துதல். குறிப்பாக e-சேவைகள், m-சேவைகள் பொதுமக்கள் விடயங்களை கையாள்வதில் பயனர் நட்புடைய இடைமுகங்களை விருத்தி செய்தல் என்பன சிலவாகும்.

நவீன சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றும் நோக்குடன் அரசாங்க நிகழ்ச்சித்திட்டங்கள் பின்வருவனவற்றில் கவனம் குவிக்கப்பட்டுள்ளன:
(அ) பொருளாதார அபிவிருத்தியை இயலச் செய்கின்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு அபிவிருத்தி
(ஆ) நல்லாட்சியை தாபித்தல்
(இ) மக்கள் நட்புடைய பொதுமக்கள் சேவைகளை வழங்குவதற்காக பொது நிறுவனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துதல்

அரசாங்கத்தின் ஐந்து வருட அபிவிருத்தி திட்டமான எதிர்காலத்திற்கான மஹிந்த சிந்தனை நோக்கு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி, எதிர்கால வருடங்களில் இத்துறையில் அதிகம் முதலீடுகளை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையை தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் முன்னோடியாக இருந்தார். அதன் பின்னர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் கணிசமான மேம்பாட்டை நாம் அடைந்துள்ளோம். கையடக்க தொலைபேசி பாவணையாளர்களின் துரித வளர்ச்சியானது இணைய பாவணையாளர்களுடன் ஒப்பிடும்போது அதிகமானதாகும் என்பது இலங்கையில் நிலவுகின்ற ஒரு உண்மையாகும். நிச்சயமாக தொலைபேசிகளினூடாக அரசாங்க சேவைகளை நாட முடியும். அதற்கு நாம் தயாராக உள்ளோமா, இது இன்று எம்மனைவரினதும் முன்னாலுள்ள ஒரு சவாலாகும். ஆதலால் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் விரிவாக்கமும் மேம்பாடும் மிகவும் முக்கியமானதாகும். 3  வருட யுத்தத்திற்கு பின்னர், இலங்கை தற்போது அபிவிருத்தி கட்டத்தில் உள்ளது. இது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஊடாக பொருளாதார அபிவிருத்திக்கான சிறந்த வாய்ப்பாகும். இலங்கை அரசாங்கமும் பொருளாதாரத்தின் தனியான துறையொன்றாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கைத்தொழிலை ஊக்குவிப்பதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்புச் செய்கின்றது. இந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கைத்தொழில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட e-அரசாங்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிப்பதோடு, அது தற்போது அதன் பயணத்தில் அரைவாசியை கடந்து சென்றுள்ளதுடன் இன்னும் அது இலங்கையின் கிராமப்புரங்களை இணைத்துக் கொள்ளவில்லை.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மூலமாக நல்லாட்சி தாபிக்கப்பட முடியும் என நாம் அனைவரும் எதிர்பார்க்கின்றோம். நல்லாட்சியின் தூண்களாக நாம் கருத்திற் கொள்ளும் போது ஒவ்வொரு அடிப்படையும் பலப்படுத்தப்படவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உரியவகையில் பயன்படுத்தி நெறிப்படுத்தப்படவும் முடியும்.


அரசாங்க சேவை வழங்குநர்களின் பதிப்பளிப்புத் தன்மை, இணைய சேவைகள், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சுயமாக பதிலளிக்கும் குறுஞ்செய்தி, மின்-கொடுப்பனவு திட்டங்கள், தகவல் நிலையங்கள்/ நுழைவாயல்கள் போன்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நவீன பிரயோகங்களை பயன்படுத்தி மேம்படுத்தப்பட முடியும்.


இணைய நுழைவாயல்கள் மூலமாக தேவையான தகவல்களை வழங்குவதன் ஊடாகவும் இணையத்திலும், இணைய சேவைகளிலும், போதிய தகவல்களை வழங்குவதன் மூலமாகவும் வகை கூறு தகைமை மேம்படுத்தப்பட முடியும். பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் பொறுப்பு குறித்தும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வழங்கப்படுகின்ற சேவைகளின் பொறுப்புள்ள அலுவலகங்கள் குறித்தும் அறிவிக்க முடியும்.


வெளிப்படைத்தன்மையானது மற்றுமொரு முக்கிய தூணாகும். இது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஊடாக மேம்படுத்தப்பட முடியும். e-கொள்வனவு செயன்முறை,e-கொடுப்பனவு திட்டங்கள், அரசாங்க வரிகள், கொடுப்பனவு நேரடியாக செலுத்துகின்றபோது கடன் அட்டைகள் மற்றும் காசு அட்டைகளின் பாவனை என்பன அத்தகைய செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கலாம். தகவல் தொழில்நுட்ப தீர்மானம் எடுத்தல் செயற்பாட்டிரும் கூட ஓரளவு வெளிப்படைத்தன்மையை பிரதிபளிக்க முடியும்.


80 வீதமான மக்கள் தற்போது தமது சொந்த கையடக்க தொலைபேசிகளை கொண்டிருப்பதால் அரசாங்க சேவைகளை வழங்குவதற்காக கையடக்க தொலைபேசிகளின் பாவனை மூலம் மக்கள் நிச்சயமாக ஒப்புரவையும் உள்ளடக்க தன்மையையும் உணர முடியுமாக இருக்கும். கையடக்க தொலைபேசி கொடுப்பனவுக்குப் பின்னர் ஒரு கையடக்க தொலைபேசி வேண்டுகோளின் அடிப்படையில் பிறப்புச் சான்றிதழ் ஒன்று வழங்கப்பட முடியுமாயின் அதுவே நாம் அனைவரும் எதிர்பார்க்கின்ற மிக சிறப்பான மக்கள் நட்புடைய சேவையாக இருக்க முடியும்.


இணைய மன்றங்களில் சம்பந்தப்பட்ட விடயங்களை விரிவாக கலந்துரையாடல், தகவல்களை பரிமாறக் கொள்ள போன்றவற்றை இணையத்தளங்கள், இணைய நுழைவாயல் மூலம் மேற்கொள்வதனூடாக பங்கேற்பு அனுகுமுறையை அதிகரிக்க முடியும். டுவீட்டர், பேஸ்புக், புலோக் போன்ற சமூக வலைத்தளங்கள் பொது நிறுவனங்களுடன் தொடர்புடைய பொதுவான விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கு இலகுவாக பயன்படுத்தப்பட முடியும்.


இணைய சேவைகளையும், மின்னஞ்சல் சேவைகளையும் அறிமுகப்படுத்துவதனூடாக மக்களுக்கு நாள் முழுவதும் வருடத்தின் 365 நாட்களிலும் விரைவான, இலகுவான சேவைகளை வழங்குவதற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அனுகுகைத் தன்மையும் மேம்படுத்தப்பட முடியும். அத்தகைய சேவைகள் இணையத்திலும், கையடக்க தொலைபேசியிலும் காணப்படுமாயின் எதிர்காலத்தில் மக்கள் அரச அலுவலகங்களுக்கு விஜயம் செய்ய மாட்டார்கள். அவர்கள் இலகுவாக இணையத்தளமொன்றில் புகுபதிகை செய்து எந்த நேர வரையறை அல்லது பௌதீக கட்டணமுமின்றி சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.


மிக விரைவாக அதிகரித்தும் மாறிவருகின்ற ஒரு உலகில், மீள்கட்டமைப்பு செயன்முறை அரச துறையைப் பொறுத்த வரை ஒரு யதார்த்தமான உண்மையாகும். இலங்கையில் அரச துறை மீள்கட்டமைப்பு செயன்முறையில் சீர்திருத்தங்கள் தாக்கம் செலுத்துவதற்கு நிறுவனங்களின் செயன்முறை மீளாய்வு உள்ளிட்ட, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அதிகரித்த பாவனை பெரும் பங்கொன்றை வகிக்கின்றது. அரசாங்க அலுவலகங்களின் புதிய தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்ள தேவையான பயிற்சி, அபிவிருத்தி திறன்களை வழங்குவது சேவை வழங்கல் திறன்களை மேம்படுத்தி ஊக்குவிக்கின்றது. ஆதலால், அரச சேவையிலுள்ள அனைத்து மட்டங்களிலுமுள்ள ஊழியர்கள், அரசாங்கத்தினாலோ அல்லது தனியார் துறை உதவியுடனோ போதிய பயிற்சிகளை வழங்க வேண்டிய தேவை உள்ளது.


தகவல் திரட்டல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் என்பன மின்னஞ்சல், இணையத்தளம், அல்லது கையடக்க தொலைபேசி என்பவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படமுடியும். அதன் பொருத்துகையின் பின்னரான கட்டத்தில் மிகவும் மலிவானதாகவும் இலகுவில் பெறத்தக்கதாகவும் இருக்கும். இதன் மூலம் பெறக்கூடிய நன்மைகள்


• தாமதங்களை குறைத்தல்
• எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை
• ஊழல் அற்ற நிலைமை
• துரித வேகத்தில் கடந்த கால பதிவுகளின் விரைவான மீட்டல்
• கடதாசியற்ற சுற்றாடலும் மக்களுடன் வாழ்வதற்கான அதிக இடப்பரப்பு


இணையத்தளத்திற்கு தகவல்களை ஏற்றுவதானது வாடிக்கையாளர் அல்லது தேவையுடையவர்கள் நிறுவனத்திற்கு விஜயம் செய்யாமலேயே தேவையான தகவல்களை/ தரவுகளை பெற அனுமதி வழங்குகின்றது. இது சேவை வழங்குநரும் அவர்களிடம் விஜயம் செய்பவர்களிடம் தகவல்களை வழங்க ஊழியர்களை அமர்த்துவதற்கான தேவைப்பாட்டினையும் கொண்டதாக இல்லை.


அதேபோல் குறுஞ்செய்தி, குரல் அஞ்சல் ஊடாக தகவல்களைப் பெறுவதற்கு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதானது வாடிக்கையாளர்களுக்கு பாரியளவில் உதவி வழங்குகின்றது. பொதுத் தகவல் நிலையத்தினூடாக தகவல்களை பெறுவதானது (1919 சேவை) இத்துறையில் ஒரு முன்னோடிப் பாய்ச்சலாகும்.


அரசாங்க நிறுவனங்களின் மீள் ஒழுங்குபடுத்துகை செயற்பாடானது அனைத்து அமைச்சுகளிலும் தாபிக்கப்பட்ட முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்கள் (MRC) ஊடாக மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளதோடு, ஆரம்பமாக இது எனது அமைச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் இத்தகைய மறுசீரமைப்பு செயற்பாட்டில் பாரிய பங்கொன்றை ஆற்ற முடியும். ஒவ்வொரு முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மாற்றங்களை முன்னெடுத்து தலைமை வகித்துச் செய்வதற்கு ஒரு பிரதான புத்தாக்க அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றங்களை முன்னெடுப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர். பிரதம புத்தாக்க அலுவலர்கள் மாற்றங்களை அறிமுகப்படுத்தி ஏனையவர்கள் மாற்றங்களை முன்னெடுப்பதற்கு ஊக்குவிக்கின்ற இரட்டை வகிபாகத்தை கொண்டிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom