முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் தாபிதமும் அமுலாக்கமும் பற்றிய மூன்றாவது செயலமர்வு

முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் தாபிதமும் அமுலாக்கமும் பற்றிய மூன்றாவது செயலமர்வு இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவகத்தில் தொலைக்கற்றல் நிலையத்தில் 2011.07.26 ஆம் திகதியன்று இடம்பெற்றது. முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் ஏற்பாட்டாளர்களுக்கான கூட்டம் அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க தலைமையில் இடம் பெற்றது.

அந்தந்த அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வைபவத்தில் செயலாளர்கள், முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடத்தின் ஏற்பாட்டாளர்கள்பங்குபற்றியதோடு, செயலாளர் திரு. ஜி.கே.டீ. அமரவர்தன, அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி. கீதமனி கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஓய்வூதியத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திரு. கே.ஏ. திலகரத்ன, கடந்த அண்மைக் காலங்களில் நிறுவனத்தில் முகாமைத்துவ மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்தும் அதன் முயற்சியில் ஓய்வூதியத் திணைக்களம் எதிர்கொண்ட பிரச்சினைகளும் சவால்களும் பற்றி விளக்கிய ஓய்வூதியத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திரு. கே.ஏ. திலகரத்ன அது தொடர்பில் எடுக்கப்பட்ட பரிகார நடவடிக்கைகள், எதிர்காலத்தில் இச் செயற்பாட்டை தொடராக முன்னெடுத்துச் செல்வதைஉறுதிப்படுத்துவதற்குஅமுல்படுத்தப்படவுள்ள பிரேரணைகளையும் விளக்கினார். மேலும் இது தொடர்பில் பங்கேற்பாளர்களிடையே கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி. கீதமனிகருணாரத்ன முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் எடுக்கப்படவேண்டிய சாதகமான நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டுக் காட்டினார். இவ்வைபவத்தில்கௌரவ அமைச்சர் தான் இவ்விடயத்தில் நேரடியாக தலையிடுவதாகவும் தெரிவித்தார்.தேவையாயின் அமைச்சுச் செயலாளர்களுக்கு முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்கள் தாபித்தலின் முக்கியத்துவத்தை தலையிட்டு விளக்குவதாகவும் உறுதியளித்தார்.

சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழுவின் உசாவுனர் திரு. உபசேன சேனாநாயக்க, அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகள், வழிகாட்டல்கள், நடைமுறைகள் பற்றி முன்வைப்புரையொன்றை செய்ததோடு, முகாமைத்துவ உசாவுனர் திரு. நிஷான்த கமலதாச முகாமைத்துவ மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் மனப்பாங்கு குறித்தும் முகாமைத்துவ மறுசீரமைப்பு கூட அங்கத்தவர்களின் திறன் அபிவிருத்தி குறித்தும் கருத்துக்களை தெரிவித்தார்.

அனைத்து அங்கத்தவர்களும் அடுத்த முகாமைத்துவ மறுசீரமைப்பு கூட செயலாளர்கள், ஏற்பாட்டாளர்கள் கூட்டத்தை 2011.09.26 ஆம் திகதியன்று தொலைக்கற்றல் நிலையத்தில் நடாத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

 

l1 l2 l3 l4 l5 l6 l7 l8

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom