ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தில் தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறைகள் மீளாய்வு பற்றிய செயலமர்வு

28 செப்டம்பர் 2011

 

ஒரு ஒருங்கிணைப்பு செயலமர்வு அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சினால் 2011 செப்டெம்பர் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணியிலிருந்து ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செயலமர்வில் செயலாளர் திரு. ஜி.கே.டீ. அமரவர்தன தலைமை தாங்கியதோடு, அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. கே.டீ.எஸ். ருவன் சந்திரவினால் வரவேற்கப்பட்டார். இதில் வெளியக வளப்புற பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள், அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப உள்ளீடுகள், தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு குழுத் தலைவர் திரு. அசோக குணவர்தன அவர்களால் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில்அநேகமானோர்செயலமர்வு பற்றி உயர்ந்து பேசியதோடு, ஏனெனில் பொதுத் துறையின் செயலாற்றுகை முன்னேற்றம் பற்றி அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பொதுத் தளமாக செயலமர்வு அமைந்தமையாகும். தேசிய நிருவாக மறுசீரமைப்பு மன்றம் இந்த முன்னெடுப்பை ஆரம்பித்ததோடு, அரசாங்கமுகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு இதை பொறுப்பேற்றது. சனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க அவர்களுக்கு இதில் விசேட நன்றிகள் தெரிவிக்கப்பட்டதோடு, தேசிய நிருவாக மறுசீரமைப்பு மன்றத்தின் தலைவர் மற்றும் திரு. தம்மிக அமரசிங்க - சனாதிபதியின் ஆலோசகர் ஆகியோருக்கு அரச நிறுவனங்களின் சேவை வழங்குகைக்கான தரத்தை மேம்படுத்துவதற்கான இந்த முயற்சிகளுக்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டன.

 

 

no1no2n3n4

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom