முகாமைத்துவ மறுசீரமமைப்பு கூடங்களின் தாபிதமும் அமுலாக்கமும் தொடர்பான நான்காவது செயலமர்வு

12 ஒக்டோபர் 2011


முகாமைத்துவ மறுசீரமமைப்பு கூடங்களின் தாபிதம் மற்றும் அமுலாக்கம் தொடர்பான முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் செயலாளர் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கான நான்காவது செயலமர்வு இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவக வளாகத்தில் தொலைக்கற்றல் நிலையத்தில் 2011 செப்டம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்றது.

அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் சார்பில் செயலாளர் திரு. ஜி.கே.டீ. அமரவர்தன, சிரேட்ட உதவிச் செயலாளர் கீதமணி கருணாரத்ன, பணிப்பாளர் கருத்திட்டம் திரு. டீ.எம்.பீ. ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டதோடு, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையின் மீள்கட்டமைப்பு அரசாங்க நிகழ்ச்சித் திட்டங்களின் பணிப்பாளர் திரு. வசந்த தேசப்பிரிய மற்றும் ஓய்வூதியங்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திரு. கே.ஏ. திலகரத்ன ஆகியோர் கலந்து கொண்டு வளவாளர்களாக தமது பங்குகளைச் செய்தனர்.

இதற்கு மேலதிக 44 அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 62 முகாமைத்துவமறுசீரமைப்பு கூட செயலாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள், சிரேஷ்ட புத்தாக்க அலுவலர்கள் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையினால் நியமிக்கப்பட்டவர்களாவர்.

அரசாங்க மீள்கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டம் e-அரசாங்க செயன்முறை ஆகியவற்றை அமுலாக்குவதில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துக்கான இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையினால் எதிர்கொள்ளப்படுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் பற்றிய விடயங்களையும் தனது அர்த்த பூர்வமான முடிவுரையில் மீள் அரசாங்க நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் திரு.வசந்து தேசப்பிரிய அவர்கள் தொட்டுக் காட்டினார். இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகளையும் அவர் கலந்துரையாடியதோடு நிகழ்ச்சித்திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துவதற்கான மாற்றீட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென்பதையும் தெரிவித்தார். இது தொடர்பில் நிறுவனத்தினால் கையாளப்பட்டுள்ள உபாய முறையை செயலமர்வில் வெளிப்படுத்தியதோடு,உரிய வழிமுறைகளினூடாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கான விடயமும் தெரிவிக்கப்பட்டது. 2010.01.01 முதல் 2012.12.31 வரையான காலப்பிரிவில் e-அரசாங்க கொள்கையை அனைத்து அரச நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றதுஎன்பதும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

ஓய்வூதியங்கள் பணிப்பாளர் நாயகம் திரு. கே.ஏ. திலகரத்ன e-ஓய்வூதியத் திட்டம் மற்றும் அதற்கான பிரயோக நடைமுறைகளிலுள்ள பிரச்சினைகளை தெளிவுபடுத்தினார். இந்த திட்டமானது அமைச்சுக்களின் முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களில் அமுல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தையும் குறிப்பிட்டுக் காட்டினார். அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி.

கீதமனி கருணாரத்ன அறிக்கைகள் சமர்ப்பிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் எதிர்காலத்தில் அவை எவ்வாறு சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

முகாமைத்துவ மறுசீரமைப்பு கூட செயலாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கான அடுத்த செயலமர்வு 2012 ஒக்டோபர் 15 ஆம் திகதி இடம் பெறவுள்ளது.

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom