தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வு வைபவத்தை ஆரம்பித்தல்


17 ஒக்டோபர் 2011

தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களின் தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வினை ஆரம்பித்து வைக்கும் வைபவம் இலங்கை மன்றக் கல்லூரியில் பல்வேறு சிறப்பு வாய்ந்த அதிதிகளின் பங்கேற்புடன் 2011 ஒக்டோபர் 04 ஆம் திகதியன்று இடம்பெற்றது. இதில் முன்னாள் அரச உத்தியோகத்தர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வளவாளர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய அழைக்கப்பட்டோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க, சனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க அவர்களுடன் இணைந்து, திரு. தம்மிக அமரசிங்க - சனாதிபதியின் அலோசகர்,திரு. அசோக்க குணவர்தன - சிரேஷ்ட முகாமைத்துவ உசாவுனர் ஆகியோர் தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வின் தற்போதைய நிலைமை, வரலாறு, அபிவிருத்தி, நன்மைகள் குறித்து உரைகளை நிகழ்த்தினர். இது தொடர்பான மீளாய்வுகள் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, நாம் அரசாங்க நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி திட்டமிடல் அமைச்சுடன் ஆகியவற்றின் அனுசரணையுடன் ஒரு முன்னோடி கருத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.

 

 

221223224225227229

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom