பொதுமக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தல்

13 ஜனவரி 2012

புதிதாக ஆட்சேர்த்துக் கொள்ளப்பட்ட உதவி நுலகர்களுக்கான “பொதுமக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் முன்சேவை பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தினாலும் (SLIDA) அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் உள்ள அரசாங்க சேவை பயிற்சி நிறுவகத்தினாலும் இணைந்து நடாத்தப்பட்டது. இதுஇலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தின் ஒரு வதிவிடப் பயிற்சியாக 2011 திசம்பர் 19-23 வரை நடைபெற்றது.

இன்று நாடு முழுவதும் ஒரு துரிதப்படுத்தப்பட்ட அபிவிருத்தியை நோக்கி வழிப்படுத்தப்பட்டுள்ளதோடு நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யத்தக்க அனைத்து மட்டங்களிலும் அரசாங்க உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர். இது தொடர்பில் அரசாங்க சேவைகளில் பல்துறை ஆற்றலுள்ள, சவால்களை எதிர்கொண்டு எந்தவொரு சூழ்நிலையிலும் பண்முக சேவைகளையும் வழங்கத்தக்க ஆட்கள் விருத்தி செய்யப்பட வேண்டியது முக்கியமானதாகும். ஆதலால் சமகால பொருளாதார முகாமைத்துவ அமைப்பு சூழ்நிலை எமது அரச சேவைகள் முன்னிலையில் இருக்கவேண்டிய தேவை இருக்கின்றதோடு, மரபு ரீதியான நிலைப்பாடுகளுக்கு அப்பால் நின்று சிந்தித்து செயலாற்றி அபிவிருத்தி முயற்சியை ஒரு யதார்த்தமாக மாற்ற வேண்டிய தேவையும் உள்ளது.

இது தொடர்பில் அதிமேதகு சனாதிபதி அரசாங்க சேவையில் அனைத்து மட்டங்களுக்குமான அனைத்து புதிய உள்ளீடுகளுக்குமான உடனடித் தேவை தொடர்பில் வலியுறுத்துகையை செய்துள்ளதோடு, அவர்கள் தமது சேவைக் காலப் பயிற்சிக்கு முன்னர் கீழ்வரும் துறைகளில் ஆரம்பத்தில் பயிற்றுவிக்கப்பட்டு தமது அமைப்புக்களுக்கு அனுப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

• அரசாங்க கட்டமைப்புக்கள், பொறிமுறைகள், பொதுச் சேவைகளை வழங்குவதற்கான செயன்முறைகள்
• அசாங்க சேவைகளின் இலக்குகளும் நோக்கங்களும் அரச சேவையாளர்களின் பொறுப்புக்களும்
• விழுமியங்கள் மனோபாவங்கள் மற்றும் தொழில் ஒழுக்கவியல்
• சேவை வழங்கலில் தகவல் தொழில்நுட்பத்தை பிரயோகித்தல்

வெளியக முகாமைத்துவ உசாவுனர்களின் உதவியுடன் அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சினால் இந்த நோக்கத்திற்காக ஒரு பயிற்சி செயற்திட்டம் விருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. இந்த பயிற்சி கைநூலின் அடிப்படையில் இந்த அமைச்சின் நிதியுதவியுடன் 2011 ஆம் ஆண்டில் ஆட்சேர்க்கப்பட்ட 34 உதவி நூலகர்களுக்கான முன் அறிமுக பயிற்சி நடாத்தப்பட்டது. இவர்கள் அரச சேவையில் தமது தொழில்களை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இப்பயிற்சிக்கு உட்பட்ட முதலாவது புதிய உள்வருகைகளாக மாறின.

எதிர்காலத்தில் ஏனைய அனைத்து புதிய ஆட்சேர்ப்புக்களும் அரச சேவையில் இந்த பயிற்சி வழங்கப்படும்.

 

p1

p2p3p4

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom