12 ஜூன் 2012
தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வானது தற்போது அதன் சிபாரிசுகளை இறுதிப்படுத்தும் கட்டத்தில் உள்ளது. அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் இது தொடர்பான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதற்கு உத்தேசித்துள்ளார். இதில் ஒன்று தேசிய நிருவாக மறுசீரமைப்பு குழுவிலுள்ள ERP மற்றும் ஏற்பாட்டாளர்களுடனானது. மற்றையது முன்னர் குறிப்பிட்டவாறு தொடர்புடைய செயலாளர்களுடன் சம்பந்தப்பட்ட கூட்டமாகும்
ஏற்பாட்டாளர்களுடன் கூட்டங்களை நடாத்துவதற்கான நோக்கம் யாதேனில் செயல்திட்டங்களின் சுமுகமான அமுலாகத்தை தாபிப்பதற்கான சிபாரிசுகளுக்கான பரஸ்பர புரிந்துணர்வை பூர்த்தி செய்வதாகும். அமைச்சு செயலாளர்களுடனான கூட்டங்களின் நோக்கம் யாதெனில் அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அதன் இணக்கத்தை பெற்றுக்கொள்ளலாகும். அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சானது அனைத்து 20 நிறுவனங்களுக்குமான சிபாரிசுகளுக்கான அங்கீகாரத்தை பூர்த்தி செய்ய நாடுகின்றது.
ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்ட ஏற்பாட்டாளர்களுடனான கூட்டங்களுக்கு ஜூன் மாதத்தில் திகதியும் நேரமும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. செயலாளர்களுடனான கூட்டத்தை நடத்துவதற்கு ஜூன் 29 திகதியிலிருந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். சிபாரிசுகள் ஏற்பாட்டாளர்களுடனும்,ERP பிரதிநிதிகளுடனும் தொடராக பகிர்ந்து மேலும் மேம்படத்தப்படவுள்ளது. ஆதலால் அனைத்து ERP பிரதிநிதிகளும் குழுத் தலைவரான திரு. அசோக் குணவர்தனவை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுவதோடு சிபாரிசுகளை சுருக்கமாக வழங்குவதில் தேவை ஏற்படின் அவரிடமிருந்து விளக்கங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
2012 மே 31 ஆம் திகதி வரை முன்னேற்ற அறிக்கை ஒன்றை வரைவதற்குERP பிரதிநிதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. (2012.05.31 ஆம் திகதிய ERP அறிக்கைகளின் சுருக்கத்தைப் பார்க்க)
பக்கம் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: செவ்வாய்க்கிழமை, ஜூன் 5, 2012 மு.ப. 12:00 மணிக்கு